வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 1 மே 2024 (08:07 IST)

5 ஆண்டுகளில் 5 பிரதமர்.. இந்தியா கூட்டணியின் திட்டமா? யார் யார் பிரதமர் வேட்பாளர்கள்?

இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் ஒரு ஆண்டுக்கு ஒரு பிரதமர் வருவார்கள் என்று ஏற்கனவே அமித்ஷா கூறிய நிலையில் அது கிட்டத்தட்ட உண்மையாகும் போல் தெரிகிறது. 
 
இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் என இன்னும் யாரையும் முடிவு செய்யாத நிலையில் ஒரே நபர் ஐந்து ஆண்டுகளுக்கு பிரதமராக இருப்பதை விட ஐந்து ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒவ்வொரு பிரதமர்  பதவியை ஏற்கலாம் என்ற திட்டம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 
 
இந்த பிரதமர் வேட்பாளர் பட்டியலில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர் சரத்பவார், உத்தரபிரதேசம் மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் மற்றும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி ஆகியோர் இருப்பதாக கூறப்படுகிறது. 
 
இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை என்றாலும் இது இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் இந்திய சரித்திரத்திலேயே இதுவரை இல்லாத அளவில் ஐந்து ஆண்டுகளுக்கு 5 பிரதமர் என்பது புதுமையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Siva