புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: திங்கள், 30 டிசம்பர் 2019 (21:37 IST)

குடிபோதையில் வாகனம் ஓட்டி சிக்கினால்... ஓட்டுநர் உரிமம் ரத்து !

சென்னை நகரில் வரும் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது, குடிபோதையில் சிக்கினால் அவர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், காவல்துறையில் குற்ற ஆவணக் காப்பக பட்டியலில் பெயர் சேர்க்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
நாளை இரவு வரும் நியூ இயரை கொண்டாட அனைத்து மக்களும் ஆயத்தமுடன் உள்ளனர். ஆண்டு தோறும் சென்னை மெரினா கடற்கரையில் புத்தாண்டை வரவேற்க இளைஞர்கள் மற்றும் மக்கள் கூடுவது வழக்கம். 
 
இந்நிலையில், இந்தப் புத்தாண்டின்போது விபத்தில்லாமல் கொண்டாடப்பட வேண்டுமென காவல்துறை விளிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது.
 
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களைப் பிடிக்க 25 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், குடிப்போதையில் வானம் ஓட்டி சிக்கினால், விசா பெறுவதில், காவல்துறை நன்னடத்தைச் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் எனவும் , ஓட்டுநர் உருமம் ரத்து செய்யப்படும் என போலீஸார் எச்சரித்துள்ளனர்.