திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 30 டிசம்பர் 2019 (11:34 IST)

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு தடையா? சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவாகும் வாக்குகள் எண்ணுவதற்கு தடை விதிக்க வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு என்று அளிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27, 30 ஆகிய இரண்டு நாட்கள் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள், நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தல் நடைபெறும் வரை எண்ணக்கூடாது என்று சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பில் செந்தில் ஆறுமுகம் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்
 
இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில் இன்றைய விசாரணையின்போது சட்ட பஞ்சாயத்து இயக்கம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குகளை எண்ணுவதற்கு தடை இல்லை என்று நீதிபதி அறிவித்தார். இதனால் அடுத்து திட்டமிட்டபடி வரும் 2ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது