செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 3 மே 2021 (12:40 IST)

கொரோனாவை கட்டுப்படுத்த புதிய அரசுக்கு ஆலோசனைகளை வழங்குவேன்: விஜயபாஸ்கர்

கொரோனா பாதிப்புகளை கட்டுபடுத்த நிச்சயம் என்னால் முயன்ற ஆலோசனைகளை வழங்குவேன் என விஜய் பாஸ்கர் தெரிவித்துள்ளார் 
 
எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் விஜயபாஸ்கர். கொரோனா வைரஸ் முதல் அலை உச்சகட்டத்தில் இருந்தபோதும் தற்போது இரண்டாவது அலையின் போதும் விஜய் பாஸ்கர் அதிரடியாக நடவடிக்கை எடுத்து கொரோனாவை கட்டுப்படுத்த உதவினார் 
 
இந்த நிலையில் தற்போது திமுக ஆட்சி அமையவுள்ள நிலையில் தனது கொரோனா கால அனுபவத்தின் மூலம் புதிய அரசுக்கு என்னால் முயன்ற ஆலோசனையை வழங்குவேன் என்று விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்
 
கொரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்த புதிய அரசுக்கு தேவையான ஆலோசனையை நிச்சயம் வழங்குவேன் என விஜயபாஸ்கர் கூறியுள்ள நிலையில் அவரது ஆலோசனைகளை திமுக பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்