மீண்டும் குறைய தொடங்கும் கொரோனா பாதிப்புகள் – இந்தியாவில் இன்றைய நிலவரம்
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் 3 லட்சத்தை தாண்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களில் 4 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு மீண்டும் குறைய தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 3,68,147 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 1,99,25,604 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 3,417 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 2,18,959 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,62,93,003 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 34,13,642 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை இந்தியா முழுவதும் 15,71,98,201 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.