1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 3 மே 2021 (10:23 IST)

விராலிமலையில் முடிவுகள் தாமதம்; விடிய விடிய காத்திருந்த விஜயபாஸ்கருக்கு இன்ப அதிர்ச்சி!

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று முதல் வெளியான நிலையில் விராலிமலை தொகுதியில் நீண்ட கால தாமதத்திற்கு பிறகு இன்று முடிவுகள் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் திமுக பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ளது. வாக்கு எண்ணும் பணிகள் இன்னும் சில இடங்களில் முடியாத நிலையில் சில தொகுதிகளில் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிட்ட விராலிமலை தொகுதியில் வாக்கு எண்ணும் பணிகள் தொடர்ந்து தாமதமாகி வந்தது. இந்நிலையில் இன்று காலை வரை வாக்கு எண்ணும் பணிகள் நீடித்த நிலையில் ஒருவழியாக விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.