2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியா? அண்ணாமலை பதில்..!
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் போட்டியிட தனக்கு விருப்பமில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியலை தமிழக பாஜக தலைவர் புரட்டி போட்டு வருகிறார் என்பதும் அவரைப் பற்றிய செய்தி ஊடகங்களில் வெளியாகாத நாளை இல்லை என்ற நிலை இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அண்ணாமலை இந்த தேர்தலில் போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. ஆனால் இது குறித்து பதில் அளித்துள்ள அண்ணாமலை 2024 எம்பி தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என்றும் தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்ல எனக்கு மனமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால் அதே நேரத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva