திங்கள், 22 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 20 மே 2023 (17:41 IST)

முதல்வர் பதவியேற்ற சித்தராமையாவுக்கு பசுவராஜ் பொம்மை வாழ்த்து

sitharamaiya
24 தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல்  கடந்த 10 ஆம்  தேதி நடைபெற்றது.இதன் வாக்கு எண்ணிக்கை 13 ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் வெளியானது.

பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடையே போட்டி இருந்த நிலையில் காங்கிரஸ் 135 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. இதை அக்கட்சியினர்  நாடு முழுவதும் கொண்டாடினர்.

இதையடுத்து, முன்னாள் முதல்வர் சித்தராமையா, டிகே. சிவக்குமார் இடையே யார் முதல்வர் பதவியில் அமர்வது என்ற போட்டி இருந்த நிலையில், கட்சி மேலிடம் தலையிட்டு,  முதல்வராக சித்தராமையாவையும், துணைமுதல்வராக சிவக்குமாரை அறிவித்தது.

அதன்படி, இன்று கர்நாடகாவில் உள்ள பெங்களூரில்  முதலமைச்சராக சித்தராமையா மற்றும் துணைமுதல்வராக டிகே. சிவக்குமார் பதவியேற்றுக் கொண்டனர்.

இவர்களுக்கு பல்வேறு மாநில அரசியல் தலைவர்கள் வாழ்த்துகள் கூறி வருகினர்.

இந்த நிலையில், கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் பசுவராஜ் பொம்மை முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள சித்தராமையாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில்,''கர்நாடக முதல்வர் பதவியேற்றுள்ள சித்தராமையாவுக்கு வாழ்த்துகள். கர்நாடக மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.