திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 1 மே 2020 (14:50 IST)

தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள சுழற்றி காரணமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் இடியுடன் மழை ஏற்பட வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது :

வெப்பச்சலனம் காரணமாக தூத்துக்குடி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என கூறியுள்ளது.

மேலும், இந்திய வானிலை ஆராய்ச்சி மையம், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதால் இது தீவிரம் அடைந்து, அடுத்த 48 மணிநேரத்திற்குள் வடமேற்கு திசை நோக்கி நகரும் என தெரிவித்துள்ளது. எனவே, அடுத்த 5 நாட்களுக்கு தெற்கு அந்தமான் தென்கிழக்கு வன்காள விரிகுடா உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது.