1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamil Nadu to have rain today

இடியுடன் கூடிய மழை: எங்கெங்கு எதிர்ப்பார்க்கலாம்?

தமிழகம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல். 
 
கடந்த 3 நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், இன்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
தேனி, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு சென்னையை பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என தகவல். 
அடுத்த கட்டுரையில்
புயலுக்கு பக்கா தமிழ் பெயர் ரெடி: எப்போ வரும்னு தெரியுமா??