திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By vinoth
Last Updated : சனி, 14 ஜனவரி 2023 (15:10 IST)

பொங்கல் வாழ்த்து செய்தியில் ‘தமிழ்நாடு ஆளுநர்’ என குறிப்பிட்ட ஆர் என் ரவி!

சில தினங்களுக்கு முன்னர் தமிழ்நாடு என சொல்வதை விட தமிழகம் என சொல்வதே சிறந்ததது என ஆளுநர் ஆர் என் ரவி பேசியது சர்ச்சைகளை உருவாக்கியது.

இதையடுத்து சட்டப் பேரவையில் உரையாற்றும் போது தமிழக அரசு அளித்த உரையில் தமிழ்நாடு அரசு உள்ளிட்ட வார்த்தைகளை அவர் மாற்றி பேசியதற்கு எதிராக முதல்வர் மு க ஸ்டாலின் கண்டன தீர்மானம் நிறைவேற்றினார். இதனால் ஆளுனருக்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து குறிப்பில் ‘தமிழ்நாடு ஆளுநர்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த வாழ்த்துக் குறிப்பில் “பொங்கல் என்பது நம் தமிழ் மக்களின் பெருமையை பறைசாற்றும் பண்டிகை, பல்லாயிரம் ஆண்டுகால  கலாசாரம், பாரம்பரியத்தை பொங்கல் திருவிழாவாகக் கொண்டாடுகிறோம். நமது வீரத்தை ‘ஜல்லிக்கட்டு’ விழாவாக இந்த நாளில் கொண்டாடுகிறோம். இந்த அறுவடை திருநாளில் எங்கிருந்தாலும், எல்லா கிராமங்களிலும், சூரிய கடவுள் மற்றும் நம் விருப்ப தெய்வங்களை கைகூப்பி வணங்கி பொங்கலோ பொங்கல் என முழக்கமிட்டு மரியாதை செலுத்துவோம்” எனக் கூறியுள்ளார்