கொரோனா நிவாரண பொருட்களை இலவசமாக வழங்கிய அரசுப்பள்ளி தலைமை அசிரியர்
பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு ரூ 20 ஆயிரம் மதிப்பிலான கொரோனா நிவாரண பொருட்களை இலவசமாக வழங்கிய அரசுப்பள்ளி தலைமை அசிரியர் & ஆசிரியை செயலுக்கு ஊர் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
கரூர் மாவட்டம் கடவூர் வட்டம், வரவனை கிராமம், வ.வேப்பங்குடி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கா.தர்மராஜு மற்றும் ஆசிரியை சு. ரேவதி இருவரும் இப்பள்ளியில் படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் 10 கிலோ அரிசி, பருப்பு , எண்ணெய், தக்காளி, கத்தரி ஆகிய பொருட்களை கொரோனா நிவாரண பொருட்களாக வழங்கினார்.
கொரோனா என்கின்ற கொடூர நோய் காரணமாக தங்கள் வாழ்வாதாரம் இழந்துள்ள மக்களுக்கு ஆங்காங்கே பல்வேறு சமூக அமைப்புகள் உதவி தந்து வரும் நிலையில், தங்களது பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சுமார் ரூ 20 ஆயிரத்திற்க்கும் மேலான பொருட்களை வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சேவையினை ஊர் பொதுமக்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளதோடு, மக்கள் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துள்ளார்கள்.