”சிகிச்சைக்காக சிறந்த மருத்துவமனை” கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை- எம் ஆர் விஜயபாஸ்கர் பெருமிதம்
தமிழக அரசு ”சிகிச்சைக்காக சிறந்த மருத்துவமனை” என்ற பெருமையை கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பாராட்டு பெற்றுள்ளது – தமிழக போக்குவரத்து அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் பெருமிதம்.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 7.18 கோடி மதிப்பிலான எம்ஆர்ஐ ஸ்கேன் ஆர்த்தோ ஆப்பரேஷன் தியேட்டர் எண்டாஸ்கோபி யூனிட் ஆகியவற்றை போக்குவரத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் திறந்துவைத்தார் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி டீன் தேரணி ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் இதுவரை கரூர் திண்டுக்கல் நாமக்கல் ஆகிய 3 மாவட்டங்களில் இருந்து 494 நபர்கள் சிகிச்சை பெற்று உள்ளனர் இவர்களில் 464 நபர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் தற்போது கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 நபர்களும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று நபர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர் இவர்கள் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்புவார்கள் 6.50 கோடி மதிப்பிலான அதிநவீன எம்ஆர்ஐ ஸ்கேன் மற்றும் 47 லட்சம் மதிப்பிலான ஆர்த்தோ ஆப்பரேஷன் தியேட்டர் 21 லட்சம் மதிப்பிலான எண்டோஸ்கோப் ஆக மொத்தம் 7.கோடியே 18 லட்சம் மதிப்பிலான மருத்துவ வசதிகள் இன்று திறக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து வந்தவர்களில் தனியார் பொறியியல் கல்லூரி மற்றும் குளித்தலை, பள்ளப்பட்டி, வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் இவர்களில் நெகட்டிவ் ஆனவர்கள் வீடு அனுப்பப்படுவார்கள். பாசிட்டிவ் ஆனவர்கள் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்படுவார்கள் என்றார்