1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : திங்கள், 15 ஜூன் 2020 (16:25 IST)

நிவாரணப் பொருட்கள் வீடு தேடி வரும்…வங்கிகள் 29,30 தேதிகளில் மட்டும் செயல்படும் தமிழக அரசு

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பரவலை தடுக்க பொதுமுடக்கம் கடுமையாக்கப்பட வேண்டும் என மருத்துவ குழுவினர் முதல்வரிடம் வலியுறுத்திய நிலையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வரும் ஜூன் 19 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி பொது முடக்கம் அமலுக்கு வருவதாக தமிழக அறிவித்துள்ளது.

சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை பெருநகர காவல் எல்லைகுட்பட்ட பகுதிகளில் வரும் 19ம் தேதி முதல் 30 தேதி வரை ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணிவரை செயல்படும் எனவும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ரேஷன் கடைகள் இயங்காது; நிவாரணப் பொருட்கள் வீடு தேடி வரும்   என  தமிழக அரசு தெரிவித்துள்ளது. மாநில, மத்திய அரசு அலுவலகங்கள் 33 சதவிகித பணியாளர்களுடன் செயல்படும் ;வரும் 21 மற்றும் 28 ஆம் தேதி ஆகிய இரு ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனவும்  தமிழக அரசுஅம்மா உணவகம், ஆதரவற்றோருக்காக உள்ளாட்சி, அரசால் நடத்தப்படும் சமையல் கூடங்கள் செயல்படும என  தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும்,  சென்னையில் வங்கிகள்33%  பணியாளர்களுடன் வருஜ்ம் 29, 30 ஆகிய தேதிகளில் மட்டும் செயல்படும், ஏடிஎம் வழக்கம் போல் செயல்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: அரசு கட்டுப்பாடுகள் விதித்தாலும் மக்களின் ஒத்துழைப்பில்லாம நோயைக் குணப்படுத்த முடியாது; முகக்கவசம் அணிவதுடன் அடிக்கடி சோப்புப் போட்டு கையைக் கழுக வேண்டும்; அரசின் முயற்சிகளும் மக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.