வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : புதன், 24 ஜூன் 2020 (16:30 IST)

யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்திற்கு மத்திய அரசு அறிவுறுத்தல் !

யோகா குரு ராம்தேவ் பதஞ்சலி ஆயூர்வேத மருந்துப்பொருட்களை விற்பனை செய்து வருகிறார். நாடு  முழுவதும் அவருக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

இந்நிலையில், கொரொனாவிற்கு பதஞ்சலி நிறுவனம் ஆயுதர்வேத மருந்து கண்டுபிடித்துவிட்டதாக கூறி விளம்பரம் செய்து வந்த நிலையில்.  அந்த விளம்பரத்தை நிறுத்துமாறு பாபா ராம்தேவுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், கொரோனாவை பதஞ்சலியின் ஆயுர்வேத மருந்து குணப்படுத்தும் என்று விளம்பரம் செய்வதை நிறுத்த  வேண்டும் எனவும்,  முறையான ஆய்வுகள் வெளியாகும்வரை எவ்வித் விளம்பரமும் செய்யக்கூடாது என பதஞ்சலி நிறுவனத்திற்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.