1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: திங்கள், 1 ஜூன் 2020 (23:27 IST)

அரசுப் பேருந்துகளில் Paytm மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெறும் முறை அறிமுகம்!

அரசுப் பேருந்துகளில் Paytm மூலம்  பணம் செலுத்தி டிக்கெட் பெறும் முறை அறிமுகம்!
தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று தலைமைசெயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போதும் அவர் கூறியதாவது :

இன்றுமுதல் 5669 பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் அதில் 60% பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவதாக தெரிவித்தார்.

நோய் பரவல்  தடுப்பு நடவடிக்கையாக 2 பேருந்துகளில்  பேடிஎம் வசதி டிஜிட்டல் பரிவர்த்தனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த வசதியில் கியூஆர் கோடு மூலம் பணம் செலுத்தலாம் ; இந்த வசதியைப் பயன்படுத்த முடியாதவர்கள் பணம் கொடுத்து டிக்கெட் பெறலாம் என தெரிவித்துள்ளார்.