புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 31 ஜனவரி 2020 (14:46 IST)

மாப்பிள்ள இவர்தான் ஆனா போட்ருக்க சட்டை என்னோடது! – திமுகவை பங்கம் செய்த ஜி.கே.மணி

முரசொலி நில விவகாரத்தில் திமுக செய்யும் மழுப்பல் காரியங்கள் திரைப்பட காமெடியை நினைவுப்படுத்துவதாக பாமக தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.

முரசொலி கட்டிடம் பஞ்சமி நிலத்தில் உள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதால் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து திமுகவும் தங்கள் பங்குக்கு சில ஆவணங்களை காட்டி ராமதாஸின் கருத்தை மறுத்து வந்தனர். இந்நிலையில் தற்போது முரசொலி கட்டிடம் திமுகவினுடையதே அல்ல வாடகைக்கு வாங்கப்பட்ட கட்டிடம் என செய்திகள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாமக தலைவர் ஜி.கே.மணி ”எங்களது கேள்வி அவர்கள் வாடகைக்கு இருக்கிறார்களா? இல்லையா என்பதல்ல. அந்த நிலம் பஞ்சமி நிலமா? இல்லையா? என்பதுதான். நியாயமான அரசியல்வாதியாக இருந்தால் தவறாக இருந்தாலும் அதை பகிரங்கமாக ஒப்புக்கொள்ள வேண்டும். திரைப்படத்தில் வரும் காமெடி போல “மாப்பிள்ள இவர்தான் அவர் போட்டுருக்க சட்டை என்னோடது” என்பது போல் “நிலம் வெற ஒருத்தரோடது.. நாங்கள் வாடகைக்கு இருக்கோம்” என்று ஏதேதோ சொல்லிக் கொண்டிருக்கின்றனர்” என்று கூறியுள்ளார்.

மேலும் வேறு ஒருவர் இடத்திற்கு எதற்காக பட்டா நகலை ஸ்டாலின் காட்டிக் கொண்டிருக்கிறார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.