1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: வெள்ளி, 31 ஜனவரி 2020 (13:44 IST)

குரூப் 2 ஏ முறைகேடு... காவல்துறையில் புகார் அளித்த TNPSC

குரூப் 1 தேர்வில் முறைகேடு நடக்கவில்லை என டிஎன்பிஎஸ்சி வாரியம் தெரிவித்துள்ளது. அதேசமயம் குரூப் 2 தேர்வில் முறைகேடு நடந்திருப்பதால் காவல் துறையிடம் புகார் அளித்து, உரிய ஆவணங்களை ஒப்படைத்துள்ளது டிஎன்பிஎஸ்சி.
சமீபத்தில் டி.என்.பி.எஸ்.சி நடத்தும் குரூப் 4  தேர்வில் முறைகேடு நடந்தது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குரூப் 2 தேர்விலும் முறைகேடுகள் நடந்திருந்க்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதற்காக சிபிசிஐடி -டிஜிபி ஜாபர் சேட் தலைமையிலான போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
 
இந்த விசாணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு தமிழக அரசு தமிழக சிபிசிஐடி போலீஸாரின் விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டுள்ளது என தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில், குரூப் 2 ஏ முறைகேடு விவகாரம் குறித்து குற்றவியல் நடவடிக்கை எடுக்க போலீஸில் புகார் அளித்துள்ளது டி.என்.பி.எஸ்.சி.
 
ராமேஸ்வரம் கீழக்கரை மையங்களில் குரூப் 2 ஏ தேர்வு எழுதியவர்களில் அதிகம் பேர் தேர்ச்சி என ஏற்கனவே சந்தேகம் எழுந்தது.
 
இதில், குற்றம் சாட்டப்பட்டவர்களை போலீஸார் கைது செய்து வருகின்றனர். 
 
இந்நிலையில் குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்காக உரிய ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது என டி.என்.பி.எஸ்.சி கூறியுள்ளது.