1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 31 ஜனவரி 2020 (11:15 IST)

தமிழில் குடமுழுக்க நடத்த கோரிய மனு தள்ளுபடி: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தஞ்சை பெரிய கோவிலி தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழா எதிர்வரும் பிப்ரவரி 5ம் தேதி நடைபெற இருக்கிறது. குடமுழுக்கு விழா ஆகம விதிகளின்படி சமஸ்கிருதத்தில் நடைபெறும் என அறிவித்ததற்கு தமிழ் அமைப்புகள் சில எதிர்ப்பு தெரிவித்தன. தமிழில்தான் கோவில் குடமுழுக்கு நடைபெற வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு அளித்தனர்.

இந்நிலையில் பிரகதீஸ்வரர் கோவில் குடமுழுக்கை தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளிலும் நடத்தலாம் என தமிழக அரசு மற்றும் இந்து அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. அதை தொடர்ந்து இன்று மனு மீதான விசாரணையில் இரண்டு மொழிகளிலும் குடமுழுக்கு நடத்த அரசு அனுமதி அளித்துள்ளதால் தமிழில் மட்டும் குடமுழுக்கு செய்ய வேண்டும் என்ற மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.