செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 27 ஆகஸ்ட் 2022 (15:34 IST)

விநாயகர் சிலை ஊர்வலம்- இறைச்சிக் கடைகள் மூட போலீஸார் வலியுறுத்தல்!

விநாயகர் ஊர்வலம் நடைபெறும் செப்டம்பர் 02 மற்றூம் 09 தேதி அன்று காஞ்சிபுரத்தில் உள்ள இறைச்சி கடை மற்றும் பிரியாணி கடைகளை மூடி ஒத்துழைக்க வேண்டும் என சிவகாஞ்சி காவல் நிலையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து காவல் துறை அறிவித்துள்ளதாவது:

காஞ்சிபுரம் மாவட்டம் சிவகாஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செங்குழு  நீரோடை நீதி, சங்கரமடம் ஆகிய பகுதிகளில் வருகின்ற 31-08-22 ஆம் தேதி அன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட இருப்பதால், 02—09-22 மற்றும் 04-09-22 ஆகிய தேதிகளில் சிலைகள் கரைக்கப்பட உள்ளதால், செங்ககுழு நீரோடை வீதி மற்றூம் சங்கரமடம் அருகிலுள்ள இறைச்சி கடை மற்றும் பிரியாணி கடைகளை மேற்கண்ட தினங்களில் எவ்வித இடையூறும் ஏற்படுத்தாமல், இருக்க வேண்டி கடைகளை மூடி  விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு ஒத்துழைப்பு அளிக்குபடி கேட்டுக்கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளது.