செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 6 செப்டம்பர் 2021 (08:03 IST)

5 மாதங்களுக்கு பின் இயங்கியது ஊட்டி மலை ரயில்: பயணிகள் மகிழ்ச்சி!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை ரயில்கள் பேருந்துகள் விமானங்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தன என்பதும் அதன் பின் தற்போது படிப்படியாக மீண்டும் அனைத்தும் இயங்கி வருகின்றன என்பதும் தெரிந்ததே
 
இருப்பினும் உதக மண்டலத்தில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மலை ரயில் மட்டும் இயக்கப்படாமல் இருந்தன என்பதும் இந்த ரயிலை விரைவில் இயக்க வேண்டும் என பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதை அடுத்து மேட்டுப்பாளையத்திலிருந்து உதகைக்கு செல்லும் ரயில் இன்று மீண்டும் கிளம்பியது. 5 மாதங்களுக்குப் பிறகு இந்த மலை ரயில் இயக்கப்பட்டதை அடுத்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று கிளம்பிய முதல் ரயிலில் 150 பயணிகள் பயணம் செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன