உலகிலேயே போக்குவரத்து நெருக்கடியான நகரங்கள்.. சென்னைக்கு எந்த இடம்?
உலகிலேயே போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், இதில் சில இந்திய நகரங்களும் இடம்பெற்றுள்ளன. சென்னை எந்த இடத்தில் உள்ளது என்று பார்ப்போம்.
கடந்த 2024 ஆம் ஆண்டில் மிகவும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள் பட்டியலை டாம் டாம் என்ற நிறுவனம் வெளியிட்டது. இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தை இந்தியாவின் கொல்கத்தா நகரம் பிடித்துள்ளது. மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் பெங்களூரு மற்றும் புனே உள்ளன.
கொல்கத்தாவில் 10 கிலோமீட்டர் தூரத்தை கடக்க 34 நிமிடங்கள் 33 வினாடிகள் தேவைப்படுவதாகவும், பெங்களூரில் 10 கிலோமீட்டர் தூரத்தை கடக்க 34 நிமிடங்கள் 10 வினாடிகள் தேவைப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், புனேயில் 10 கிலோ மீட்டரை கடக்க 33 நிமிடங்கள் 22 வினாடிகள் தேவைப்படுகிறது.
இந்த பட்டியலில் ஹைதராபாத் 18-வது இடத்தில் உள்ளது, சென்னை 31-வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் 10 கிலோமீட்டர் தூரத்தை கடக்க 30 நிமிடங்கள் 20 வினாடிகள் தேவைப்படுகிறது என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
Edited by Siva