வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 7 ஏப்ரல் 2021 (22:24 IST)

நடிகர் பிரஷாந்த்திற்கு கேக் ஊட்டிவிட்ட பிரபல நடிகை ...

நடிகர் பிரஷாந்த் பிறந்த்நாளை முன்னிட்டு அவருக்கு படப்பிடிப்பில் பிரபல நடிகை கேக் ஊட்டிவிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

90களில் முன்னணி நடிகராக இருந்தவர் பிரசாந்த். இவர் இடையில் பிஸினஸில் ஈடுபட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் நடிக்கவந்துள்ளார்.

.இரண்டாவது மிகப்பெரிய கம்பேக்காக கருதப்படுவது இவர் தற்போது நடித்து வரும் அந்தாதூன் என்ற இந்தி படத்தின் ரீமேக்  ஆகும்.

இப்படத்தில் ஏற்கனவே நடிகை சிம்ரன் இணைந்துள்ள நிலையில் இப்படத்தில் நடிகை பிரியா ஆனந்த் இணைந்துள்ளார். இப்படத்தை பிரஷாந்தின் தந்தை தியாகராஜன் தயாரிக்கவுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், பிரஷாந்தும், சிம்ரனும் சுமார் 20 வருடங்கள் கழித்து இணைந்து இப்படத்தில் நடிக்கவுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், ஏப்ரல்  4 ஆம் தேதி சிம்ரனும், ஏப்ரல் 6 ஆம் தேதி பிரஷாந்தும் அடுத்தடுத்து பிறந்த்நாள் வருவதால் அந்தாதூன் பட ஷூட்டிங் ஸ்பாட்டில் இருவரும் தங்களின் பிறந்தநாளைக் கேக் வெட்டிக் கொண்டாடினர்..

இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.