Daily Horoscope
✕

இன்று முதல் சென்னையின் பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் முழு விபரங்கள்!

Written By siva
Updated: திங்கள், 13 செப்டம்பர் 2021 (07:03 IST)
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற உள்ளதை அடுத்து இன்று முதல் சென்னையில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
 
1.போரூர் மார்க்கத்திலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் மார்க்கமாக செல்லும் வாகனங்களுக்குப் போக்குவரத்து மாற்றம் எதுவுமில்லை.
 
2.கோடம்பாக்கம் மேம்பாலம் மார்க்கத்திலிருந்து போரூர் சாலிகிராமம் நோக்கி ஆற்காடு சாலையில் செல்லும் வாகனங்கள், பவுர் ஹவுஸ் சந்திப்பு வரை சென்று, இடதுபுறம் திரும்பி, அம்பேத்கர் சாலையில் அசோக் நகர் காவல் நிலையம் வரை சென்று, வலது புறம் திரும்பி, 2-வது அவென்யூ சாலை வழியாக, 100 அடி சாலை சந்திப்புவரை சென்று, நேராகவும் ராஜன் சாலை, ராஜ மன்னார் சாலை, 80 அடி சாலை வன்னியர் சாலை வழியாக போரூர் சாலிகிராமம் செல்லலாம்.
 
3. கோடம்பாக்கம் மேம்பாலத்திலிருந்து, வடபழனி சந்திப்பு நோக்கி ஆற்காடு சாலையில் செல்லும் வாகனங்கள், பவர் ஹவுஸ் சந்திப்புவரை சென்று, இடதுபுறம் திரும்பி, அம்பேத்கர் சாலையில், அசோக் நகர் காவல் நிலையம் வரைசென்று, வலதுபுறம் திரும்பி, 2-வது அவென்யூ சாலை, 100 அடி சாலை வழியாக சென்று வடபழனி சந்திப்பு செல்லலாம்.
 
4.வடபழனி சந்திப்பிலிருந்து, ஆற்காடு சாலையில் செல்லும் வாகனங்கள், துரைசாமி சாலைக்கு வலதுபுறமாக திரும்பக் கூடாது. மாறாக பவர் ஹவுஸ் சந்திப்பு, அம்பேத்கர் சாலை, அசோக் நகர் காவல் நிலையம் சந்திப்பில் வலதுபுறம் திரும்பிச் செல்லலாம்.
 
5.அசோக் பில்லரிலிருந்து, கோடம்பாக்கம் மேம்பாலம் நோக்கிச் செல்லும் வாகனங்கள், அம்பேத்கர் சாலையில், அசோக் நகர் காவல் நிலையம் சந்திப்புவரை சென்று, இடதுபுறம் திரும்பி 2-வது அவென்யூ சாலை, துரைசாமி சாலை, ஆற்காடு சாலை வழியாக செல்லலாம்.
 
6.ஆற்காடு சாலை, துரைசாமி சாலை சந்திப்பிலிருந்து, பவர் ஹவுஸ் சந்திப்பு நோக்கிச் செல்லும் வாகனங்கள், வழக்கம்போல அனுமதிக்கப்படும். ஆனால், பவர் ஹவுஸ் சந்திப்பிலிருந்து, ஆற்காடு சாலை துரைசாமி சாலை சந்திப்பிற்கு வாகனங்கள் செல்ல அனுமதியில்லை.
 
7. வாகனங்கள், அம்பேத்கர் சாலை 2-வது அவென்யூ சாலை சந்திப்பிலிருந்து 2-வது அவென்யூ சாலை 100 அடி சாலை சந்திப்பிற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், 2-வது அவென்யூ சாலை 100 அடி சாலை சந்திப்பிலிருந்து அம்பேத்கர் சாலை 2-வது அவென்யூ சாலை சந்திப்பிற்கு செல்ல அனுமதியில்லை.
 
8.வாகனங்கள் அம்பேத்கர் சாலையில், பவர் ஹவுஸ் சந்திப்பிலிருந்து அசோக் நகர் காவல் நிலைய சந்திப்பு நோக்கி அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், அசோக் நகர் காவல் நிலையம் சந்திப்பிலிருந்து, பவர் ஹவுஸ் சந்திப்பிற்கு செல்ல அனுமதியில்லை.
 
 
 

எல்லாம் காட்டு

ஊரு ஃபுல்லா பேரிகார்ட்!.. ஓவர் பில்டப்!.. நிறுத்துங்க மகாராஜா!.. புளூசட்டமாறன் நக்கல்..

தவெகவுக்கு எதிராக குழந்தைகளை பேச வைத்தாரா உதயநிதி? வழக்குப்பதிவு செய்த போலீசார்..

இன்றுடன் பிரச்சாரம் முடிவு.. கடைசி நாளில் தாராபுரத்தின் 30 இடங்களுக்கு செல்லும் முதல்வர் விஜய்...

சார் அது கண்ணாடி சார்!.. ஸ்டாலின் பேச்சுக்கு ராஜ்மோகன் பதிலடி!..

வங்கதேசத்திற்கு ஹசீனாவை அனுப்ப காலக்கெடு எதையும் வழங்க முடியாது.. இந்தியா திட்டவட்டம்...

அடுத்த கட்டுரையில்
Show comments