வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 12 செப்டம்பர் 2021 (10:42 IST)

ஐபிஎல் தொடரில் இருந்து மேலும் 3 இங்கிலாந்து வீரர்கள் விலகல்!

ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க உள்ளன.

இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற இருந்த ஐபிஎல் 2021 சீசன் கொரொனா இரண்டாம் அலையின் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில் எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் நடக்கவுள்ளதாக பிசிசிஐ அறிவித்தது. அதன்படி, கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் பலப்பரிட்சை நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் அணிகளில் பல மாற்றங்கள் நடந்து வருகின்றன. பல வீரர்கள் தனிப்பட்ட காரணங்களால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளனர். அந்த வகையில் 3 இங்கிலாந்து வீரர்கள் இப்போது தங்கள் சொந்த காரணங்களுக்காக விலகியுள்ளனர். சன் ரைசர்ஸ் அணியைச் சேர்ந்த ஜானி பேர்ஸ்டோ, பஞ்சாப் அணியின் டேவிட் மலான், மற்றும் டெல்லி அணியைச் சேர்ந்த கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் விலகுவதாக அறிவித்துள்ளனர்.