Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மது அருந்தும்போது தகராறு!.. இளைஞரை கொன்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நண்பர்கள்!...

Updated: வியாழன், 6 ஆகஸ்ட் 2026 (15:18 IST)
தற்போதெல்லாம் மது, கஞ்சா போன்ற போதை பொருட்களால் பல கொலைகள் தொடர்ந்து நடைபெறுகிறது. குறிப்பாக இளைஞர்கள் மது பழக்கத்திற்கும் கஞ்சா பழக்கத்திற்கும் அடிமையாகி விட்டனர். எனவே மது போதையில் அவர்கள் செய்த தவறுகள் அவர்களுக்கு தெரிவதில்லை.

அதுவும் கொலை செய்துவிட்டு வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைப்பது போன்ற விஷயங்களை கூட அவர்கள் தைரியமாக செய்கிறார்கள். இந்நிலையில்தான் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறு காரணமாக இளைஞரை சுத்தியால் அடித்துக் கொலை செய்து செல்ஃபி எடுத்து அதை இன்ஸ்டகிராமில் பதிவிட்ட சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது..

கோவை மாவட்டம் சிக்கலாம்பாளையத்தில் இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது. அந்த பகுதியில் வசித்து வந்தவர் அஸ்வின்(22). அவர் தனது நண்பர்களுடன் மது அருந்தியிருக்கிறார். அப்போது ஏற்பட்ட சண்டை காரணமாக அவரை சுத்தியல் மற்றும் கத்தியால் தாக்கி கொலை செய்து அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட மாதேஷ் மற்றும் 16 வயது சிறுவனை போலீசார் தேடி வருகிறார்கள். தப்பியோடிய இருவரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறது.
கிணத்துக்கடவு போலீசார் இது பற்றி விசாரணை செய்து வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது .<>
About Author
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More

எல்லாம் காட்டு

தைரியம் இருந்தா விஜய் வாயை திறந்து பேசட்டும்!.. உதயநிதி ஸ்டாலின் சவால்!..

செய்தி வாசிப்பாளருக்கு பாலியல் தொல்லை!.. பி.ஆர்.சுந்தர் கைது!...

எல்.ஐ.சியின் ரூ.31,500 கோடி மதிப்பு பங்குகளை ரகசியமாக விற்பனை செய்ததா மத்திய அரசு?

தந்தையின் இறப்புக்கு கூட வராத 3 மகள்கள்.. இறுதிச்சடங்கை வீடியோ காலில் பார்த்த கொடுமை.. மனிதம் மரத்துவிட்டதா?

தஹல்கா பெண் ஊழியருக்கு லிஃப்டில் பாலியல் தொல்லை.. நிறுவனர் தேஜ்பால் குற்றவாளி.. நீதிமன்றம் தீர்ப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments