1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (09:06 IST)

தண்டவாளம் பராமரிப்பு பணி.. 4 ரயில்கள் ரத்து.. மாற்றுப்பாதையில் செங்கோட்டை எக்ஸ்பிரஸ்..!

Train
தண்டவாள பராமரிப்பு பணியின் காரணமாக நான்கு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் செங்கோட்டை ரயில் மாற்றுப்பாதையில் செல்ல இருப்பதாகவும் ரயில்வே துறை அறிவித்துள்ளது.  
 
திருச்சி அருகே தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக நேற்று சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டன என்பதும் சில ரயில்கள் தாமதமாக வந்தது என்பதையும் பார்த்தோம்,
 
 இந்த நிலையில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் திருவாரூர் வழியாக மாற்றுப்பாதையில் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதேபோல் மயிலாடுதுறையிலிருந்து திருச்சி, விழுப்புரம் செல்லும் ரயில்கள் உட்பட நான்கு ரயில்கள் என்று ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ரயில்கள் ரத்து மற்றும் மாற்று பாதையில் ரயில்கள் இயக்கம் ஆகியவை ரயில் பயணிகளுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva