5 மணி நேரம் தாமதமாக வரும் பாண்டியன், நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்கள்: என்ன காரணம்?
தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் பாண்டியன், பொதிகை மற்றும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்று 5 மணி நேரம் தாமதமாக வந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன
பாண்டியன், நெல்லை, பொதிகை உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் திருச்சி அருகே நடைபெற்று வரும் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக தாமதமாக வந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் திருச்சி தஞ்சை மயிலாடுதுறை விழுப்புரம் கரூர் ஆகிய பகுதிகளிலிருந்து முன்பதிவு இல்லாத ரயில்கள் இன்றும் நாளையும் ரத்து என்று அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் 2 மணி நேரம் தாமதமாக இன்று காலை 9:15 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் நிலையத்தில் ஒவ்வொரு ரயிலாக அனுமதிக்கப்படுகிறது என்றும் இதனால் காலதாமதம் ஏற்பட்டு இருப்பதாகவும் ரயிலே துறை விளக்கம் அளித்துள்ளது.
Edited by Siva