திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 15 பிப்ரவரி 2023 (17:55 IST)

4 மாணவிகள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த விவகாரம்: தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்!

suspend
காவிரி ஆற்றில் நான்கு மாணவிகள் மூழ்கி உயிரிழந்த விவகாரத்தில் தலைமை ஆசிரியர் உள்பட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியை சேர்ந்த 15 மாணவிகள் குடியரசு தின விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக திருச்சி மாவட்டத்திற்கு வந்துள்ளனர். 
 
அதன் பிறகு அவர்கள் கதவணை பகுதியை சுற்றிப் பார்த்துவிட்டு கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு காவிரி ஆற்றில் குளிப்பதற்காக இறங்கி உள்ளனர். அப்போது காவிரி ஆற்றில் இனியா, லாவண்யா, சோபிகா, தமிழரசி ஆகிய நான்கு மாணவிகள் நீரில் மூழ்கியுள்ளனர்
 
இது குறித்து தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்திய நிலையில் நான்கு பேர்களும் அடுத்தடுத்து சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். 
 
இந்த நிலைகளில் இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில் மாணவி உயிரிழந்த விகாரத்தில் தலைமை ஆசிரியர் மாணவிகளை காக்க தவறியதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்
 
Edited by Siva