ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 11 ஆகஸ்ட் 2021 (07:56 IST)

ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரையும் தனித்தனியாக சந்தித்த வேலுமணி: என்ன காரணம்?

ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரையும் தனித்தனியாக சந்தித்த வேலுமணி
முன்னாள் அதிமுக அமைச்சர் வேலுமணி வீட்டில் நேற்று 12 மணி நேரத்திற்கும் மேலாக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தியது என்பது இதில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது என்பதும் தெரிந்ததே
 
800 கோடி ரூபாய்க்கும் மேலான டெண்டர்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில் வேலுமணி உள்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்
 
இந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் முடிவடைந்த பின்னர் முன்னாள் அமைச்சர் வேலுமணி எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து ஆலோசனை செய்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
அதன்பின் அவர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்களையும் சந்தித்து ஆலோசனை செய்தார். இந்த ஆலோசனையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை குறித்து வேலுமணி இருவரிடமும் பேசியதாக தெரிகிறது
 
இந்த நிலையில் அ+திமுக தரப்பிலிருந்து வேலுமணி வீட்டில் நடந்த சோதனைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது