எடப்பாடி பழனிசாமியுடன் வேலுமணி சந்திப்பு: ரெய்டு குறித்து ஆலோசனையா?
முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் இன்று காலை முதல் வருமானவரித் துறையினர் மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையினர் ரெய்டு செய்ததாக வெளி வந்த தகவலை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
மேலும் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் பல ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படும் நிலையில் வேலுமணி உள்பட 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 12 மணி நேரமாக நடந்த ரெய்டு முடிந்தவுடன் முன்னாள் அமைச்சர் வேலுமணி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நேரில் சந்தித்து ஆலோசனை செய்தார்
இந்த ஆலோசனையின் போது ரெய்டு குறித்து இருவரும் பேசியதாக கூறப்படுகிறது. மேலும் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பேசியதாக கூறப்படுகிறது