1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (19:03 IST)

12 மணி நேரம் நடந்த எஸ்பி வேலுமணி வீட்டின் ரெய்டு முடிவு! ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா?

முன்னாள் அதிமுக அமைச்சர் வேலுமணி வீட்டில் இன்று காலை 6 மணி முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து வந்த நிலையில் அந்த சோதனை நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் அவரது சகோதரர்கள், உறவினர்களுக்கு சொந்தமான 60 இடங்களில் இன்று காலை முதல் அதிரடியாக சோதனை நடந்தது. இந்த சோதனையின்போது எம்எல்ஏ அறையிலிருந்த வேலுமணி இடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை செய்ததாக கூறப்பட்டது 
மேலும் பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாகவும் ஒரே லேப்டாப்பில் இருந்து டெண்டருக்கான விண்ணப்பங்கள் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டு வந்தது. மேலும் 800 கோடிக்கு மேல் ஒரு சில நிறுவனங்களுக்கு மட்டுமே டெண்டர்கள் வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டு வந்தது 
 
இந்த நிலையில் தற்போது கடந்த 12 மணி நேரமாக நடந்த லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை முடிவுக்கு வந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன. வேலுமணி வீட்டில் எந்த ஆவணங்களும் சிக்கவில்லை என்றாலும் அவருக்கு நெருக்கமான வீடுகளில் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது