1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (19:06 IST)

முதலமைச்சருடன் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி சந்திப்பு: எஸ்பி வேலுமணி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

முதலமைச்சருடன் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி சந்திப்பு: எஸ்பி வேலுமணி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி கந்தசாமி அவர்கள் சற்றுமுன் சந்தித்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இன்று காலை 6 மணி முதல் முன்னாள் அதிமுக அமைச்சர் வேலுமணி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை செய்து வருகின்றனர் 
 
இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி கந்தசாமி அவர்கள் சற்று முன் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்தார் 
 
இந்த சந்திப்பு 15 நிமிடங்கள் நடந்ததாக கூறப்படுகிறது. வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை செய்து வரும் நிலையில் அடுத்த கட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இருவரும் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது