1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (09:01 IST)

இன்று பாஜகவில் இணைகிறார் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை: பரபரப்பு தகவல்

கடந்த சில மாதங்களாகவே பிரபலங்கள் பாஜகவில் இணைவது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் ஐபிஎஸ் பதவியை இராஜினாமா செய்த அண்ணாமலை, விரைவில் காங்கிரஸில் இணைவார் என கூறப்பட்டது. இந்த தகவல் தற்போது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது
 
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை இன்று டெல்லியில் பாஜக தலைவர் ஜேபி நட்டா அவர்களை சந்தித்து அவர் முன் பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே கடந்த மாதமே பாஜகவில் அமித்ஷா முன்னிலையில் இணைய திட்டமிடப்பட்டு இருந்ததாகவும் ஆனால் திடீரென அமித்ஷா கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் பாஜகவில் இணைவது ஒத்தி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு பாஜகவில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் அண்ணாமலை இணைய இருப்பதாகவும் இதற்காக அவர் டெல்லி சென்று இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்களும் இந்த இணைப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று தெரிகிறது 
 
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, ரஜினி கட்சியின் முதல்வர் வேட்பாளர் என்று பரபரப்பாக பேசப்பட்டது. இது குறித்து ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால் திடீரென தற்போது அவர் பாஜகவில் இணைவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜகவில் அண்ணாமலை இணைந்தாலும் ரஜினி கட்சிக்கு ஆதரவாகவே அவர் செயல்படுவார் என்றும் கூறப்படுகிறது