செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 24 ஆகஸ்ட் 2020 (18:27 IST)

தமிழக வளர்ச்சிக்கு முட்டுகட்டை திமுக - நேரடியாய் தாக்கும் நட்டா!!

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா திமுகவை நேரடியாக விமர்சித்திருப்பது சர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது. 
 
திமுக தலைவரும், எதிர்கட்சி தலைவருமான ஸ்டாலின் பாஜகவை நேரடியக அபல முறை விமர்சித்துள்ளார். அதுவும் தற்போது கொரோனாவை கட்டுப்படுத்தும் வரை நீட், ஜெ.இ.இ. தேர்வுகளை ஒத்திவைக்க மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 
 
இந்நிலையில், நாட்டு வளர்ச்சியில் அக்கறையற்றவர்களுக்கு திமுக புகலிடமாக உள்ளது. தேசிய உணர்வுகளுக்கு எதிரான கட்சியாக திமுக உள்ளது. தேசிய முன்னேற்றத்திற்கு எதிராக இருப்பவர்களுக்கு தமிழக பாஜக பதிலடி கொடுக்க வேண்டும் என்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா பேசியுள்ளார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.