1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 5 அக்டோபர் 2021 (19:48 IST)

புலியை பிடிக்கும் வியூகத்தை மாற்றியுள்ளோம்: துணை கள இயக்குனர் அருண்குமார்

கடந்த சில நாட்களாக கூடலூர் அருகே டி23 என்ற புலி பொதுமக்கள் மற்றும் கால்நடைகளை இறையாக்கி வரும் நிலையில் அந்த புலியை பிடிக்க 50க்கும் மேற்பட்ட வனத்துறையினர் கடந்த 11 நாட்களாக தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
மயக்க ஊசி போட்டு பிடிப்பது சுட்டுக்கொல்வது உள்பட பல்வேறு வியூகங்களை வனத்துறையினர் ஈடுபட்டுள்ள நிலையில் அந்த புலி இன்னும் பிடிபடாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் துணை இயக்குனர் அருண் குமார் என்பவர் புலியை பிடிக்கும் வியூகத்தை மாற்றி உள்ளதாக தெரிவித்துள்ளார். புலியை பிடிக்கும் வியூகத்தை தற்போது மாற்றி உள்ளதாகவும் விரைவில் மயக்க மருந்து செலுத்தி குறிப்பிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அதிகமாக இருப்பதால் தேடும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்