தொடர்புடைய செய்திகள்
- சிறுவனுக்கு புற்றுநோய்; விஷ ஊசி போட்ட தந்தை! – சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்!
- கும்பலாக சுத்துவோம்.. பேருந்தில் ரகளை செய்த மாணவர்கள்! – பிரித்து அனுப்பிய காவல்துறை!
- 1500க்கும் குறைந்தது கொரோனா பாதிப்பு:
- கோவில் திறக்காத தமிழக அரசை கண்டித்து பாஜ ஆர்ப்பாட்டம்!
- ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்!
போக்கு காட்டிய புலியை சுற்றி வளைத்த வனத்துறை! – மயக்க ஊசி செலுத்த திட்டம்!
நீலகிரியில் கடந்த 11 நாட்களாக சிக்காமல் சுற்றி வந்த ஆட்கொல்லி புலியை வனத்துறையினர் சுற்றிவளைத்துள்ளனர்.
நீலகிரி தேவன் எஸ்டேட் பகுதியில் மூன்று பேர் மற்றும் பசுமாடுகளை ஆட்கொல்லி புலி ஒன்று கொன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து அந்த புலியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் முயற்சிகள் மேற்கொண்டனர்.
ஆனால் அனைத்திலும் தப்பிய புலி தேவன் எஸ்டேட்டிலிருந்து மசினக்குடி நோக்கி நகர்ந்ததுடன் அங்கு மாடு மேய்த்த ஒருவரையும் அடித்துக் கொன்றது. அதிகமான மனித பலிகள் ஏற்பட்டு வருவதால் ஆட்கொல்லி புலியை தேவைப்பட்டால் சுட்டுபிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 11 நாட்களாக புலியை தேடும் பணி தொடர்ந்து வந்த நிலையில் தற்போது புலி பதுங்கியுள்ள பகுதியை வனத்துறையினர் சுற்றி வளைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளதாக பேசிக் கொள்ளப்பட்டுகிறது.
அடுத்த கட்டுரையில்
