1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 5 அக்டோபர் 2021 (08:23 IST)

11வது நாளாக தொடரும் டி-23 புலியை பிடிக்கும் பணி!

கூடலூர் அருகே மனிதர்கள் மற்றும் விலங்குகளை கொன்று இரையாக்கி வரும் ஆட்கொல்லி புலியை பிடிக்க 11வது நாளாக வேட்டை தொடர்கிறது என தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
கூடலூர் அருகே டி23 என்ற புலி நான்கு மனிதர்கள் மற்றும் 30க்கும் மேற்பட்ட கால்நடைகளை இறையாக்கி உள்ளது என்பதும் இதனை அடுத்து அந்த புலியை உயிருடனோ அல்லது கொன்ற பிடிக்க வனத்துறை உத்தரவிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
இந்த புலியை பிடிப்பதற்காக மசினகுடி, சிங்காரா ஆகிய வனப்பகுதிக்குள் 50க்கும் மேற்பட்ட வனத் துறையினர் கடந்த 10 நாட்களாக தேடுதல் வேட்டை நடத்தி வரும் நிலையில் இன்று 11வது நாளாக  பணி தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று அல்லது நாளை போல் டி23 புலி பிடிக்கப்படும் என்றும் அதுவரை மசனகுடி மற்றும் சிங்காரா ஆகிய பகுதியில் உள்ள பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.