செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 8 மார்ச் 2024 (07:18 IST)

மகாசிவராத்திரியை முன்னிட்டு சதுரகிரிக்கு செல்ல பக்தா்களுக்கு அனுமதி.. எத்தனை நாட்கள்?

sathuragiri
ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி தினத்தில் சதுரகிரியில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோவிலில் பக்தர்கள் குவிந்து வரும் நிலையில் இந்த ஆண்டும் சதுரகிரி மலைக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய நான்கு நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இன்று முதல் அதாவது மார்ச் 8 முதல் 11ஆம் தேதி வரை பக்தர்கள் சதுரகிரி மலைக்கு செல்லலாம் என்றும் வனத்துறை அறிவித்துள்ளது.

அமாவாசை, பிரதோஷம், மகா சிவராத்திரி என அடுத்தடுத்த விசேஷ தினங்கள் வருவதை ஒட்டியே வனத்துறை இந்த அனுமதியை பக்தர்களுக்கு வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ஆனால் அதே நேரத்தில் எதிர்பாராத மழை பெய்தால் சதுரகிரி மலைக்கு செல்லும் அனுமதி ரத்து செய்யப்படும் என்றும் வனத்துறை தெரிவித்துள்ளது. மேலும் மகா சிவராத்திரி தினத்தன்று சதுரகிரி கோவிலில் இரவில் தங்கி வழிபட அனுமதி வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்த நிலையில் இது குறித்து வனத்துறை பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Edited by Siva