மகாசிவராத்திரி: வெள்ளியங்கிரி மலையேற குவியும் பக்தர்கள்.. 3 லட்சம் பேர் என தகவல்..!
ஒவ்வொரு வருடமும் மகா சிவராத்திரி தினத்தில் கோவை அருகே உள்ள வெள்ளியங்கிரி மலைக்கு ஏராளமான பக்தர்கள் ஏறிவரும் நிலையில் இந்த ஆண்டும் பக்தர்கள் குவிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மகாசிவராத்திரி கொண்டாட்டம் வெள்ளியங்கிரி மலையில் ஒவ்வொரு வருடமும் மிக சிறப்பாக கொண்டாடப்படும் என்பதும் குறிப்பாக திரையுலக பிரபலங்களும் இந்த மலைக்கு வருகை தருவார்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மார்க் 8ஆம் தேதி சிவராத்திரி கொண்டாட இருக்கும் நிலையில் வெள்ளியங்கிரி மலை ஏறுவதற்கு ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்
இதுவரை வெள்ளையங்கிரி மலைக்கு 40000 பேர் மலையேறி உள்ள நிலையில் இந்த ஆண்டு மூன்று லட்சம் பேர் வரை மலையேறலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது/ இதனை அடுத்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
Edited by Mahendran