ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 4 மார்ச் 2024 (17:52 IST)

அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயம்.! மகா சிவராத்திரியை முன்னிட்டு கொடியேற்றம்..!!

Temple
விருத்தாச்சலம் சந்தைதோப்பு அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மகா சிவராத்திரி ரணகளிப்பு முன்னிட்டு கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
 
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் காட்டுக்கூடலூர் சாலை சந்தைதோப்பு அருகே உள்ள அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் 11 நாள் விழா கோலாகலமாக நடைபெறும்.
 
இந்நிலையில் மகா சிவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி வெகு விமர்சியாக நடைபெற்றது,
 
முன்னதாக மணிமுத்தா நதிக்கரையில் இருந்து சக்தி கரகம் சுமந்து ஆலயத்தில் உள்ள கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பின்பு மேளதாளங்களுடன் கொடியேற்றம் வெகு விமர்சியாக நடைபெற்றது.

 
ஆலயத்தை சுற்றி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், ஆலயத்தில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருளை பெற்றனர்.