ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 21 பிப்ரவரி 2024 (16:17 IST)

பட்டாசு வெடி விபத்து..! மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. அறிக்கை தர உத்தரவு.!!

fire workers
ஆலங்குளம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கைகள் தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கும்,  காவல் கண்காணிப்பாளருக்கும் மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
 
விருதுநகர் மாவட்டம் ராமு தேவன் பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் கடந்த 17-ஆம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் ஆலையில் பணிபுரிந்த 4 பெண்கள் உள்பட 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.  
 
மேலும் நான்கு தொழிலாளர்கள் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 3 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ஒரு லட்சமும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்ப்பட்டது.

 
இந்த சம்பவம் தொடர்பாக தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் நீதிபதி ராஜ இளங்கோ,  வெடி விபத்து தொடர்பாக நான்கு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.