திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (09:57 IST)

எல்லை தாண்டும் மீனவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை.. இலங்கை நீதிமன்றம் உத்தரவு..!

எல்லை தாண்டும் மீனவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை என இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் இலங்கை நீதிமன்ற உத்தரவுக்கு தமிழக மீனவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் ராமேஸ்வரம் மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தில் இருந்து மீனவர்கள் நடை பயணம் செய்யவிருப்பதாகவும், 3 நாட்கள் நடைபயணமாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட திட்டமிட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. மேலும் இந்த நடைப்பயணத்தில் பதாகைகளை கையில் ஏந்தியபடி ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
எல்லை தாண்டி மீன்பிடிப்பதால் தமிழக மீனவர்கள் அவ்வப்போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் தமிழகம் மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர். 
 
தமிழக மீனவர்கள் எல்லையை தாண்டாமல் மீன்பிடித்தால் எந்த விதமான பிரச்சினையும் இருக்காது என்றும் தமிழக மீனவர்களுக்கு எல்லை குறித்த விழிப்புணர்வை இந்திய கடற்படை ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது
 
Edited by Mahendran