வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 21 பிப்ரவரி 2024 (11:51 IST)

சைக்கிள் சின்னம் கோரி ஜி.கே வாசன் மனு..! தேர்தல் ஆணையும் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!!

மக்களவை பொதுத்தேர்தலில் சைக்கிள் சின்னம் ஒதுக்கக்கோரி தமிழ் மாநில காங்கிரஸ் தாக்கல் செய்த மனு மீது தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்க உத்தரவிடக்கோரி அதன் தலைவர் ஜி.கே.வாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
 
சைக்கிள் சின்னம் ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தும், பரிசீலிக்கப்படாமல் நிலுவையில் உள்ளதாக மனுவில் தெரிவித்து இருந்தார்.
 
2019ம் ஆண்டு பொதுத்தேர்தலை போல இந்த தேர்தலுக்கும்  தங்களது கட்சிக்கு சைக்கிள் சின்னம் வழங்க உத்தரவிட வேண்டுமென மனுவில் ஜி.கே வாசன் கோரிக்கை  விடுத்திருந்தார்.

 
இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சைக்கிள் சின்னம் ஒதுக்கக்கோரிய ஜி.கே வாசன் மனு மீது தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நாளை மறுநாளுக்கு தள்ளி வைத்தார்.