1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 8 டிசம்பர் 2022 (22:22 IST)

FIFA உலகக் கோப்பை : நாளை காலிறுதி ஆட்டம் தொடக்கம்

football
நாளை நள்ளிரவு  12:30 மணிக்கு அர்ஜெண்டினா- நெதர்லாந்து அணிகள் 2வது அரையிறுதிப் போட்டியில் மோதவுள்ளன.

கத்தார் நாட்டில் ஃபிஃபா 22வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் உற்சாகத்துடன் நடந்து வருகிறது.

32 நாடுகள் பங்கேற்ற இப்போட்டியில், கடந்த 2 ஆம் தேதியுடன் லீக் சுற்று முடிவடைந்து, 16 நாடுகள் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றன.

இதில், பிரேசில், அர்ஜென்டினா,  நெதர்லாந்து, குரோஷியா, போர்ச்சுகள், மொராக்கொ ஆகிய 8 அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன.

எனவே நாளை முதல் காலிறுதிப் போட்டி தொடங்கவுள்ளது.

இதன் முதல் ஆட்டத்தில்,  நாளை இரவு 8:30 மணிக்கு பிரேசில்- குரேஷியா அணிகள் மோதுகின்றனர்.

இப்போட்டி, எஜிகேசன் சிட்டி என்ற மைதானத்தி நடக்கவுள்ளது.

Edited By Sinoj