திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 10 ஜனவரி 2022 (22:04 IST)

தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் நீட்டிப்பு - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என தகவல் வெளியான நிலையில் வரும் ஜனவரி 31 ஆம் தேதி வரை கூடுதல் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

 இந்தியாவில் மூன்றாவது அலை கொரொனா வேகமாகப் பரவி வருகிறது.  இதைத் தடுக்க மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கள் எடுத்து வருகிறது.

சமீபத்தில் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் கொரொனா கட்டுப்பாடுகள் விதிகப்பட்டன.

இருப்பினும் கொரொனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என தகவல்  வெளியான நிலையில் தற்போது முக்கிய உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது.

அதன்படி, வரும் ஜனவரி 31 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு கூடுதல் கட்டுப்பாடுகள் கூடிய ஊரடங்கு   நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதி எனவும், வரும் 14 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை அனைத்து  வழிபாட்டுத் தளங்களிலும் அனுமதி இல்லை எனவும், 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு எனவும், பொங்கல் பண்டிகையொட்டி பொதுப்பேருந்திகளில் 78% பயணிகளுக்கு மட்டுமே அனுமதி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.