திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 7 டிசம்பர் 2023 (07:21 IST)

சென்னை சென்டிரலில் இருந்து புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சேவையில் மாற்றம்: தெற்கு ரெயில்வே தகவல்

Train
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கிளம்பும் எக்ஸ்பிரஸ் ரயில்களின்  சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  
 
சென்னையில் பெய்த கன மழை மற்றும் பெரு வெள்ளம் காரணமாக ரயில் தண்டவாளங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் சென்னை சென்ட்ரலில் இருந்து பிற மாநிலங்களுக்கு கிளம்பும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவை  ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியேற்றுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:
 
சென்னை சென்டிரலில் இருந்து ஐதராபாத் செல்லும் ஹம்சாபர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.12603), கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து சென்னை சென்டிரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22640) ரத்து.
 
திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை சென்டிரல் வரும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் (12696/ 22208)  ரத்து.
 
கொல்லத்தில் இருந்து சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16102), சென்னை எழும்பூரில் இருந்து திருச்செந்தூர் செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (20605)  ரத்து.
 
மதுரையில் இருந்து சென்னை எழும்பூர் வரும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் (22672), சென்னை சென்டிரலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் மெயில் ரெயில் (12623) ஆகிய ரயில்கள்  ரத்து.
 
சென்னை எழும்பூர் - செங்கோட்டை செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (20681)  ரத்து.
 
தாம்பரத்தில் இருந்தும், சென்னை சென்டிரல் - மைசூர் செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (12609)  ரத்து.
 
சென்னை கடற்கரையில் இருந்தும், சென்னை சென்டிரல் - மங்களூரு செல்லும் செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (22637) திருவள்ளூரில் இருந்தும், சென்னை சென்டிரல் - மைசூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12609) சென்னை கடற்கரையில் இருந்தும், சென்னை சென்டிரல் - ஜோலார்ப்பேட்டை செல்லும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் (16089) அரக்கோணத்தில் இருந்தும், சென்னை சென்டிரல் - ஆமதாபாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22919) திருவள்ளூரில் இருந்தும், சென்னை சென்டிரல் - பெங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12607) காட்பாடியில் இருந்தும்  ரத்து செய்யப்பட்டுள்ளது.
 
Edited by Siva