1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 12 மார்ச் 2021 (08:24 IST)

வாக்கு இயந்திரத்தில் முறைகேடு - சர்ச்சையில் சிக்கிய தேர்தல் ஆணையம்?

வாக்கு இஅயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என வைரலாகும் வீடியோவால் தேர்தல் ஆணையம் சிக்கலில் உள்ளது. 

 
முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி சில ஆண்டுகளுக்கு முன் வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என கூறியதாக ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இது குறித்து தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 
 
அதில், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி சில ஆண்டுகளுக்கு முன் கூறியதாக வெளியான வதந்தி தற்போது மீண்டும் உலா வந்து கொண்டிருக்கிறது. இதற்கு டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஏற்கெனவே மறுப்பு தெரிவித்துவிட்டார். 
 
வாக்கு இயந்திரத்தில் முறைகேடு நடப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. தேர்தல் நேரத்தில் இந்த வதந்தியை பரப்பியவர்கள் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.