1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
  4. Some tips to lower cholesterol fast

கொலஸ்ட்ராலை வேகமாக குறைக்க சில டிப்ஸ்

Some tips
தானியங்களுள் ஒன்றான பார்லியில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், இதனை உண்டால், உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அதிகரிப்பது தடைபடுவதோடு, கொலஸ்ட்ராலும் கரைந்துவிடும்.
 
கத்திரிக்காயில் கலோரிகள் மிகவும் குறைவு மற்றும் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இதனை உட்கொண்டால், உடலில் கொலஸ்ட்ரால் உறிஞ்சப்படுவது  குறைக்கப்படும்.
 
மீன்களில் சால்மன் மற்றும் டூனா போன்றவற்றை சாப்பிட்டு, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறையுங்கள். தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், உடலில் தங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை எளிதில் குறைக்கலாம்.
 
நட்ஸில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக உள்ளாதால், இது கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும். ஆகவே ஸ்நாக்ஸ் நேரத்தில் பாதாம், வால்நட் போன்றவற்றை உட்கொண்டு, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.
 
அனைவருக்குமே டீயில் புற்றுநோயை எதிர்க்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்துள்ளது என்று தெரியும். இருப்பினும், அந்த டீயில் ப்ளாக் டீயை குடித்து வந்தால், உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம்.
 
ஓட்ஸை காலை உணவாக உட்கொண்டால், உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிப்பதை குறைக்கலாம். மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், உடலில்  தங்கியிருக்கும் கொலஸ்ட்ராலின் அளவும் குறையும்.
 
முழு தானியங்கள் இதயத்திற்கு மிகவும் நல்லது. ஏனெனில் இதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் எண்ணற்ற அளவில் நிறைந்துள்ளன. எனவே தினை, கேழ்வரகு  போன்றவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது.
 
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
இத்தனை வகை TEA-ஆ...? வாய பிளக்காதீங்க மக்கா!!