திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 18 மார்ச் 2023 (15:20 IST)

''அதிமுகவை சீர்குலைக்கும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ''- ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

அதிமுக பொதுச்செயலாளருக்கான தேர்தலை  இடைக்கால  பொதுச்செயலாளார் எடப்பாடி தலைமையிலான அதிமுகவினர் அறிவித்தனர்.
 

இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளருக்கு தேர்தல் அறிவித்துள்ளது மிகவும் சிறுபிள்ளைத்தனமானது என்று பண்ருட்டி ராமச்சத்திரன் இன்று கூறியுள்ளார்.

இன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது: அதிமுகவின் சட்டவிதிகளைப் பின்பற்றாமல் திடீரென்று தேர்தல் அறிக்கையை வெளியிடப்பட்டுள்ளது அதிமுகவை கொச்சைப்படுத்தும் செயலாகும். ஏற்கனவே, நீதிமன்றத்தில் புகார்கள் இருக்கும்போது, தேர்தல் நடத்தலாமா?

இதையடுத்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், ‘’தற்போது, அதிமுகவை சீர்குலைக்கும் வகையில் எடப்பாடி பழனிசமி தரப்பினர் ஈடுபட்டு வருகின்றனர் என்று குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல்,  இன்று முதல் 20 ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் பிற்பகல் வரை வேட்புமனுதாக்கல்  நடைபெறவுள்ளது.

இந்த வேட்மனுவை மார்ச் 21 ஆம் தேதி பிற்பலம் 3 மணிக்கும் திரும்பப் பெறலாம், மார்ச் 26 ஆம் தேதி பொதுச்செயலாளர் தேர்ததல் நடைபெறும் நிலையில், மார்ச் 27 ஆம் தேதி ஓட்டுகள் எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.